ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது..

Published:

20230227 070907 1 - 2026

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா வாக்களித்தார்.சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

20230227 072731 - 2026
வாக்களிக்க குடும்பத்துடன் வந்த ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் 4-ம் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வேட்புமனுக்களை பரிசோதித்த தேர்தல் அதிகாரி இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

20230227 071517 - 2026

அதன்படி, இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்த முள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 ஆகும். இடைத்தேர்தலுக்காக 52 இடங்களில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

தேர்தல் பணியில் 1 ஆயிரத்து 206 அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் சுமூகமாக நடைபெற துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

500x300 1162209 a 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img