Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img
spot_img

― Advertisement ―

Homeசற்றுமுன்தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 முக்கிய அம்சங்கள்..

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 முக்கிய அம்சங்கள்..

To Read in Indian languages…

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே, இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளை நிதியமைச்சர் வாசித்து வருகிறார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.3513 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

 உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ,40 299 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும். ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்.

மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சென்னை கிண்டியில் கருணாநிதி பெயரில் இந்த ஆண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும்.
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.223 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு 3959 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.

உக்ரைன் போர், உலகளாவிய நிதி நெருக்கடிகள் காரணமாக வரும் ஆண்டில் நிதி ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைக்கப்படும்.

நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்து வாசித்துவர எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் அப்பாவு நிதியமைச்சரின் உரையைத் தவிர எதற்கும் அவையில் தற்போது அனுமதியில்லை என்று கூறினார். இதனையடுத்து அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திருக்குறளை வாசித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,768FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version