புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே தீயத்துார் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயிலில் ருத்ரஹோமம் நடந்தது
இக்கோயில் மிகப்பழமையான கோயிலாகும்.இக்கோயிலில் சிவ பக்தர்கள் ருத்ரஹோமம் செய்து சகஸ்ரலட்சுமீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்
அதன்படி நடந்த விழாவில் முன்னதாக கோயிலில் உள்ள வாஞ்சாகணபதி வள்ளி தேவசேனா சுப்ரமணியர்,சூரியன்,சந்திரன்,லிங்கோத்பவர்,தட்சிணாமூர்த்தி,பிரம்மா,பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து ருத்ரஹோமம் செய்து சிவனுக்கு அனைத்து அபிஷேகம் செய்து அதனை தொடர்ந்து கலச நீர் அபிஷேகம் நடந்தது
அபிஷேக அர்ச்சனைகளை கணேஷ் குருக்கள் செய்தார்.