
கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக மே10
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 244 தொகுதிக்கும் மே 10ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
வேட்புமனு பரீசிலனை ஏப்ரல் 21-ம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற ஏப்ரல் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்லது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் இரண்டு முறை எடியூரப்பாவும், ஒரு முறை பசவராஜ் பொம்மையும் முதலமைச்சர்களாக ஆட்சி செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது.