
மதுரை அருகே விடுதி மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதனைக் கண்ட நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மாணவி அருகே செல்போன் இருந்ததால் செல்போனில் பேசிக்கொண்டே தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்