பக்தர்களின் உயிர் கிள்ளுக் கீரையா? கொண்டத்துக் காளியம்மன் குண்டத்தில் அறநிலையத்துறை அலட்சியம் காட்டுவதாக ஹிந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
இன்று (4.3.23) பூமிதி திருவிழா நடைபெற்றது. அறநிலையத்துறை ஏற்பாடுகளை முறையாகச் செய்யாததால் நூற்றுக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழிக்குள் விழுந்து தீக்காயம் அடைந்தனர்.
இதனால் பக்தர்கள் பூக்குழி இறங்குவது தடை செய்யப்பட்டு குண்டம் அருகில் நடந்து செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
பூக்குளியை சுற்றி
சுவர் எழுப்பியது மற்றும் அளவிற்கு அதிகமாக பூக்குழிக்குள் கரும்பு போட்டது போன்றவை பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்ற சிறப்புமிக்க அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் திருவிழாவில் ஆகம விதிகளை மீறி தான்தோன்றித்தனமாக செயல்பட்டு குண்டத்தை சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் பல்வேறு பொருட்களை அதில் போட்டு பக்தர்களுக்கு காயம் ஏற்படும் அளவிற்கு சென்றதற்கு காரணமான அறநிலையத்துறையை சார்ந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் .
மேலும் பாரம்பரியமிக்க இந்த விழாவில் சுற்றுப்புற கிராமத்தில் இருக்கின்ற ஊர் பெரியவர்களுடைய ஆலோசனையையும் வருகின்ற காலத்தில் கேட்டு பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் விழா ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்