
தெலுங்கானாவில் ரூ 11,360 கோடி மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி இன்று(ஏப்ரல் 08) துவக்கி வைத்தார்.
முன்னதாக, செகந்திராபாத் – திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ரயில், தெலுங்கானாவில் இயக்கப்படும் 2வது வந்தே பாரத் ரயிலாகும்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. மாநிலத்திற்கு வந்த மோடியை, விமான நிலையத்திற்கு சென்று வரவேற்கவும் இல்லை.
இன்று சென்னை விமான நிலையத்தில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் 1,260 கோடி ரூபாய் செலவில் சர்வதேச ஒருங்கிணைந்த முனையத்தின் புது கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை, பிரதமர் மோடி இன்று மாலை 3:00 மணியளவில் துவங்கி வைக்கிறார். இதனால், விமான நிலையம் வரும் பயணியர், முன்கூட்டியே வருமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பின், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். இதனால், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர்கள், இன்று மதியம் 2:00 மணி முதல் 6:00 மணி வரையில் அல்லிகுளம் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர்.
அதுபோல், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. குறிப்பாக, நடைமேடை 4, 6க்கு நேரடியாக செல்லும் நுழைவுகளில் அனுமதிக்கப்படாது. விரைவு ரயில்கள் ஏற்கனவே இருக்கும் கால அட்டவணைப்படி வழக்கம் போல் இயக்கப்படும். அதேபோல காமராஜர் சாலையில், விவேகானந்தர் இல்லத்தில், ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி குறித்து அவதுாறு பேசியதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. இதை கண்டித்து, காங்கிரசார் நாடு முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காமராஜர் சாலை, விவேகானந்தர் மடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரைக்கு போலீசார் ‘சீல்’ வைக்க முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே, பிரதமர் வருகையால், மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை – நொச்சிகுப்பம் வரை, இன்று மாலை, 7:00 மணி வரை மீனவர்கள் யாரும் படகுகள் வாயிலாக மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஐ.என்.எஸ்., அடையார் விமான படை தளத்தில் இருந்து, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும், இன்று மாலை 3:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்பு உள்ளது.
பிரதமர், மெரினா கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது, காந்தி சிலை அருகே, கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள், ஆர்.கே.சாலைக்கு திருப்பி விடப்படும்.
அங்கிருந்து நடேசன் சாலை சிக்னலில் ஐஸ் ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள், தொழிலாளர் சிலை அல்லது அண்ணா சாலைக்கு வலதுபுறம் திரும்பி செல்லலாம்.
போர் நினைவு சின்னத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள், தொழிலாளர் சிலையில் இருந்து, வாலாஜா சாலையில், அண்ணா சாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சிக்னலில் திருப்பி விடப்படும்.
வணிக வாகனங்கள், மதியம் 2:00ல் இருந்து, இரவு 8:00 மணி வரை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா ஆர்ச்சில் இருந்து, முத்துசாமி பாலம் வரை, இரு திசைகளிலும் செல்ல அனுமதி இல்லை.
கீழ்ப்பாக்கம் ஹன்டர்ஸ் சாலையில் இருந்து செல்லும் வணிக வாகனங்கள், ஹன்டர்ஸ் சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி, அண்ணா நகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பி விடப்படும். கீழ்ப்பாக்கம் லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து, காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
அடையாறு கிரீன்வேஸ் சாலையில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள், மந்தைவெளி நோக்கி திருப்பி விடப்படும் ராயபுரம், என்.ஆர்.டி., புதிய பாலத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், ஸ்டான்லி சுற்று, மின்ட் சிக்னல், மூலகொத்தளம் சிக்னல், பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, காமராஜர் சாலையில், தொழிலாளர் சிலையில் இருந்து, விவேகானந்தர் இல்லம் வரை கூடுதல் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
போலீசாரின் செய்திக்குறிப்பில் பல்லாவரத்தில் இருந்து விமானம் நிலையம், கிண்டி மார்க்கமான வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது என தெரியவந்துள்ளது.
ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், திருநீர்மலை மேம்பாலம் ஏறி, 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக, வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னை நகருக்குள் செல்லலாம்
ஜி.எஸ்.டி., சாலை பெருங்களத்துாரில் இருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள், தாம்பரம் மேம்பாலம் வழியாக வலது புறம் திருப்பி விடப்படுகின்றன. கிஷ்கிந்தா சாலையில் இருந்து, தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பல்லாவரத்தில் இருந்து விமானம் நிலையம், கிண்டி மார்க்கமான வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், திருநீர்மலை மேம்பாலம் ஏறி, 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக, வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னை நகருக்குள் செல்லலாம்.
ஜி.எஸ்.டி., சாலை பெருங்களத்துாரில் இருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள், தாம்பரம் மேம்பாலம் வழியாக வலது புறம் திருப்பி விடப்படுகின்றன. கிஷ்கிந்தா சாலையில் இருந்து, தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.