- Advertisements -
Home சற்றுமுன் சென்னை விமான நிலைய முனைய கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் ..

சென்னை விமான நிலைய முனைய கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் ..

#image_title
- Advertisements -
972675

சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். பிரதமரை வரவேற்க பா.ஜ.க. சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

500x300 1862842 pm1

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார். பிரதமரை வரவேற்க அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் பா.ஜ.க. சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

- Advertisements -

பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இடங்களின் அருகே திரண்டனர்.

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின், ‘காந்தி இன் தமிழ்நாடு’ என்ற புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார். அது, காந்தியின் தமிழக வருகை குறித்த புத்தகம் ஆகும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகை தந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.

சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புத்தகம் பரிசளித்து வரவேற்றார். ‘Gandhi’s Travel in TamilNadu’ என்ற புத்தகத்தை பிரதமருக்கு முதல்வர் வழங்கி வரவேற்றார்.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.