தங்கம் விலை சரிவு..

Published:

images 66 1 - 2026
#image_title

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.44,800-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் புதன்கிழமை வரலாறு காணாத அளவில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,736-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,000-ஆக இருக்கிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img