ஶ்ரீரங்கத்தில் நாளை (11.4.2023) தொடங்கும் விருப்பன் திருநாள் 600 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சித்திரை உற்சவம் ஆகும்.
இந்த உற்சவம் தொடங்கப்பட்டது 1383 ஆம் ஆண்டு. இந்த ஆண்டு 640-வது உற்சவம். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது சிறப்பம்சம் ஆகும்.
13-ம் நூற்றாண்டில் அன்னியர் படையெடுப்புக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் மதுரைக்கும், திருப்பதிக்கும் இடம்பெயர்ந்தார். 48 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்தார். விஜயநகரப் பேரரச மன்னர் விருப்பன்ன உடையார் 17,000 பொற்காசுகளும், 52 கிராமங்களும் தானமாக கொடுத்து இவ்விழாவைத் தொடங்கி வைத்தார். இதனால் விருப்பன் திருநாள் எனப்படுகிறது. இவ்விழாவில் 14ம் தேதி கருட சேவை, 19ம் தேதி திருத்தேரோட்டம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.