Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்தமிழகத்தில் பட்டதாரி இல்லாத வருவாய்துறை அதிகாரிகள் பதவி இறக்கம்..

தமிழகத்தில் பட்டதாரி இல்லாத வருவாய்துறை அதிகாரிகள் பதவி இறக்கம்..

1863713 19

தமிழகத்தில் பட்டதாரி இல்லாத 200-க்கும் மேற்பட்ட வருவாய்துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு குரூப்-2 தேர்வு மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்கள் பட்டப்படிப்பு தகுதியாக கொண்டவர்கள். இவர்கள் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு துணை தாசில்தார் பதவி உயர்வை அடைவர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயரக்கூடும்.

இதுதவிர வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்றவர்கள் குரூப்-4 தேர்வு மூலம் தேர்வாகி பணியாற்றி வருகிறார்கள். இவர்களும் வருவாய் ஆய்வாளராகவும், துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஒ போன்ற உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற முடியும். 1995-ம் ஆண்டு 133 அரசாணையின்படி நேரடியாக வருவாய் அலுவலராக பணிநியமனம் பெற்றவர்களுக்கு பட்டதாரிகள் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதை எதிர்த்து பட்டதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருவாய் ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது செல்லும்.

நேரடியாக நியமனம் அல்லாத வருவாய் ஆய்வாளர்கள் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் முன்னுரிமை வழங்கலாம். பட்டதாரிகளாக இல்லாதவர்களுக்கு முன்னுரிமை கிடையாது என்று தெரிவித்தது. 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நேரடி நியமன வருவாய் ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை செல்லும் என்று உறுதிப்படுத்தியது.

கடந்த 15 ஆண்டுகளாக வழக்குகளால் தாமதம் ஆன வருவாய் துறையில் ஏற்பட்ட பதவி உயர்வு குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த காலங்களில் இளநிலை உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஒ வரை சென்றுள்ளனர். பட்டதாரிகள் அல்லாமல் பதவி உயர்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

அவர்களை தற்போது பதவி இறக்கம் செய்யக் கூடிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட கோட்ட அதிகாரிகளாகவும், ஆர்.டி. ஏ.க்கள் தாசில்தாராகவும் பதவி இறங்குகிறார்கள். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாசில்தார்கள், துணை தாசில்தார் பதவிக்கு தரம் இறக்கப்பட்டனர். இதுகுறித்