Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்இபிஎஸ் மனுஏப்ரல் 12-க்கு ஒத்திவைப்பு

இபிஎஸ் மனுஏப்ரல் 12-க்கு ஒத்திவைப்பு

images 73

பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை – ஏப்ரல் 12-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 12-க்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அ.தி.மு.க.வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். மேலும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி பிரதீபா எம்.சிங் அமர்வில் 10-ந்தேதி (இன்று) விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.