
திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைண்டம் வைகுந்தநாதனுக்கு சித்திரை உற்சவம் இங்கு பிரம்மனாலேயே நடத்தப்பட்டது. நடப்பாண்டு இன்று கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியுள்ளது.வரும் 15-ம் தேதி நான்கு கருட சேவை உற்சவமும், 19-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன
பிரம்மதேவனின் தவத்தை ஏற்று, வைகுந்தத்தில் வீற்றிருப்பது போல் பெருமாள் காட்சி கொடுத்த இடம் ஸ்ரீவைகுண்டம். ஸ்ரீவைகுந்தவல்லி, பூதேவி சமேதராக ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.
திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள தலம் இது. பிரம்மா தமது கமண்டலத்தில் தாமிரபரணி நீரையெடுத்து திருமாலுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம்
செய்ததால் இன்றும் கலச தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது.
இக்கோயிலில் உற்சவர் ஸ்ரீகள்ளபிரான் (சோரநாதன்) மீது வடமொழியில் ‘சோரநாத சுப்ரபாதம்’ என்ற நூல் இயற்றப்பட்டுள்ளது. வைகுந்தநாதனுக்கு சித்திரை உற்சவம் இங்கு பிரம்மனாலேயே நடத்தப்பட்டது. நடப்பாண்டு இன்று கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்குகிறது. வரும் 15-ம் தேதி நான்கு கருட சேவை உற்சவமும், 19-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன.