
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.45,040-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,630-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,624-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,400-ஆக இருக்கிறது.