
சிவகாசி அருகே இன்று தந்தை இறந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார் ஒரு மாண
சிவகாசி அருகே சோரம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45)-கலா தம்பதி. பட்டாசு தொழிலாளர்களான இவர்களுக்கு
முத்துசெல்வி என்ற 15 வயது மகள் உள்ளார். திருத்தங்கல்லில் உள்ள குறுவம்மாள் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று பொது தேர்வு எழுதி வருகிறார்.
மஞ்சக்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவியின் தந்தை முத்துச்சாமி இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவியின் தந்தை உயிரிழந்த நிலையில் துக்கத்தில் பங்கெடுத்து கொள்ளாமல் இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு கணித பொது தேர்வை எழுத மிகுந்த சோகத்துடன் வந்திருந்த மாணவி முத்து செல்விக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் ஆறுதல் கூறினர்.
தந்தை இறந்த சோகத்திலும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மனம் தளராத மாணவியின் முயற்சி மாணவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.