உலகில் பிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது.
இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 17ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.