- Ads -
Home சற்றுமுன் IPL 2023: ஆட்ட நாயகன் ஆன விராட் கோலி!

IPL 2023: ஆட்ட நாயகன் ஆன விராட் கோலி!

அதன் பின்னர் தமிழக வீரர் ஷாருக் கான் 10 பந்துகளில் 23 ரன் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிபெற வைத்தார்.

#image_title
ipl 2023 matches

ஐ.பி.எல் 2023 – 16ஆம் நாள் – 15.04.2023

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2023 தொடரின் 16ஆம் நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் பெங்களூருவில் ராயல் கேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் ஹைதராபாத்தில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே லக்னோவில் நடந்தது.

பெங்களூரு vs டெல்லி

பெங்களூரு அணி (174/6, கோலி 50, ட்யூ ப்ளேசிஸ் 22, மஹிபால் 26, மேக்ஸ்வெல் 24, மார்ஷ், குல்தீப் யாதவ் இருவரும் தலா 2 விக்கட்) டெல்லி அணியை (151/9. மனீஷ் பாண்டே 50, நோர்ட்ஜே 23, அக்சர் படேல் 21, வார்னர் 19, விஜய்குமார் வைஷாக் 3/20) 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாடியது. விராட் கோலி (34 பந்துகளில் 50 ரன்) ட்யூ ப்ளேசிஸ் (16 பந்துகளில் 22 ரன்) இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதன் பின்னர் ஆட வந்த மஹிபால் (18 பந்துகளில் 26 ரன்) மேக்ஸ்வெல் (14 பந்துகளில் 24 ரன்) எடுத்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். தினேஷ் கார்த்திக் இன்றும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இவரது ஆட்டம் பெங்களூரு அணிக்கு பிரச்சனையாக இருக்கிறது. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 174 ரன் எடுத்தது.

ALSO READ:  தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் வலியுறுத்தல்!


அதன் பின்னர் ஆட வந்த டெல்லி அணிக்கு முதல் ஓவரில் ப்ருத்வி ஷா (ரன் எதுவும் எடுக்கவில்லை), இரண்டாவது ஓவரில் மார்ஷ் (ரன் எதுவும் எடுக்கவில்லை), மூன்றாவது ஓவரில் யஷ் துல் (ஒரு ரன்), ஆறாவது ஓவரில் வார்னர் (19 ரன்) என பெரிய பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். மனீஷ் பாண்டே (50 ரன்), அக்சர் படேல் (21 ரன்), ஹகீம் கான் (18 ரன்) நோர்ஜே (23 ரன்) எடுத்தனர். இருப்பினும் டெல்லி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவரில் 9 விக்கட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து 23 ரன்களில் தோல்வியுற்றது.

ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாப் vs லக்னோ

லக்னோ அணி (159/8, கே.எல். ராகுல் 74, கைல் மேயர்ஸ் 29, க்ருணால் பாண்ட்யா 18, ஸ்டொயினிஸ் 15, சாம் கரன் 3/31, ராபாடா 2/34) பஞ்சாப் அணியை (சிகந்தர் ராசா 57,மேத்யூ ஷார்ட் 34, ஹர்ப்ரீத் சிங் 23, ஷாருக் கான் 23, யுத்வீர் சிங், மார்க் வுட், ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கட்டுகள்) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது.

ALSO READ:  ஓணம், சதுர்த்தி சிறப்பு ரயில்கள்; ராஜபாளையம் வழியாக ‘தாம்பரம்- கொச்சுவேலி’!


டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ், ராகுல் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தார்கள். மேயர்ஸ் (23 பந்துகளில் 29 ரன்) எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா இந்த ஆட்டத்திலும் ரன் அடிக்கவில்லை. 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

துரதிர்ஷ்ட வசமாக நிக்கோலஸ் பூரன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிற வீரர்கள் சரியாக விளையாடததால், கே.எல். ராகுல் நன்றாக விளையாடியும் (56 பந்துகளில் 74 ரன்) லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 159 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

பஞ்சாப் அணியில் இன்று அணித்தலைவர் ஷிகர் தவான் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக சாம் கரன் அணித்தலைவராக இருந்தார். தொடக்க வீரர்கள் அதர்வா தைதே, ப்ரப்சிம்ரன் சிங் இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து விளையாட வந்த மேத்யூ ஷார்ட் (22 பந்துகளில் 34 ரன்), ஹர்ப்ரீத் சிங் (22 பந்துகளில் 22 ரன்) இருவரும் நன்றாக ஆடினார்கள்.

ஒருபுறம் சிக்கந்தர் ராசா நிலைத்து ஆட மறுபுறம் சாம் கரன் (6 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (2 ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். 17.5ஆவது ஓவரில் சிக்கந்தர் ராசா 41 பந்துகளில் 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

ALSO READ:  மைசூர் ரயிலுக்கு செங்கோட்டை, அருப்புக்கோட்டையில் வரவேற்பு!

அதன் பின்னர் தமிழக வீரர் ஷாருக் கான் 10 பந்துகளில் 23 ரன் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிபெற வைத்தார். 19.3 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 161 எடுத்து பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Senkottai Sriram
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version