ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு, கிளி மற்றும் மங்கல பொருட்கள் இன்று ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றது.
ஸ்ரீரங்கத்தில் ஏப்.19 சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்தின்போது பெருமாள் சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு, கிளி மற்றும் மங்கல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
இதனை முன்னிட்டு இன்று மாலை 4:00 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு, கிளி மற்றும் மங்கலப் பொருட்கள் சமர்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் ஸ்தானிகம் ரமேஷ் தலைமையில் பட்டு, கிளி மற்றும் மங்கலப் பொருட்கள் ஒரு கூடையில் வைத்து, கோயில் பிரகாரம் சுற்றி வந்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நாளை செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீரங்கம் கோயிலில் மங்கலப் பொருட்கள் ஒப்படைக்கப்படுகிறது. இதனை ஏப். 19 தேரோட்டத்தின்போது பெருமாள் சாற்றிக் கொள்கிறார்.