
கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை, திருவனந்தபுரம் – கண்ணுார் இடையே துவங்கப்பட உள்ளது.வரும் 25ல் பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை, 14 வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
15வது வந்தே பாரத் ரயில், கேரளாவில் திருவனந்தபுரம் – கண்ணுார் இடையே, வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.இதில் 501 கி.மீ. துாரத்தை 7.10மணிநேரங்களில் சென்றது.
அதில் ரயில்வே உயர் அதிகாரிகள் பயணம் செய்து, ரயில் பாதை தரம், ரயில் நிறுத்தும் நேரம், ‘சிக்னல்’ தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து, ஆய்வு மேற்கொண்டனர். இந்த ரயில் சேவையை, வரும் 25ல் பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம் கண்ணூர் நிலையங்களுக்கு இடையிலான 501 கி.மீ.துாரத்தை, இந்த ரயில் ஏழ மணி நேரங்களில் கடக்கும் என கூறப்படுகிறது. கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது.