நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி, இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஓடப்பள்ளியில் உள்ள காவிரியில் குளிக்க சென்ற இவர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில், எதிர்பாராதவிதமாக ஆழமான நீரில் இருவரும் மூழ்கினர் என்று பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.
தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்களுடன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும் போதிய வெளிச்சம் இல்லாத காரனத்தால் மறுநாள் காலை சடலங்களை மீட்டனர்.
முதல் கட்ட விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(21), அவரது நண்பர், சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த கிரிநாதன்(21), என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் பள்ளிபாளையம் அருகே உள்ள பேப்பர் மில்லில் வேலை செய்து வந்தனர்.