Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்கேரளா-பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு மிரட்டல் கடிதம் கேரளாவில் உஷார்

கேரளா-பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு மிரட்டல் கடிதம் கேரளாவில் உஷார்

1500x900 1235319 modione33 3

பிரதமர் மோடியின் கேரள வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பட்டடுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்க வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி கொச்சி செல்லவிருக்கிறார். இந்தநிலையில், பிரதமர் மோடியின் கொச்சி வருகையின்போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என்று, அம்மாநில பாஜக அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், அனுப்பியவர் பெயர், முகவரி அனைத்து விவரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

கடித்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில்அந்த நபர், தான் எந்தக் கடிதமும் அனுப்பவில்லை என்றும், தன்னுடைய எதிரிகள் தன்னை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கத்தில் தனது பெயரைப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன.

இதற்கிடையில், பாதுகாப்பு ஒத்திகைகளை குறிக்கும் ஏடிஜிபியின் கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில், தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல்வேறு அமைப்புகளால் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏடிஜிபின் கடிதம் ஊடகங்களில் கசிந்தது குறித்து கவலை தெரிவித்துள்ள கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், இது மாநில காவல்துறையில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்கவும், பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் நிக