
பிரசித்தி பெற்ற சார்தாம் யாத்திரை அட்சய திருதியான இன்று முதல் தொடங்குகிறது.
உத்தரகண்ட்டின் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கும் பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தாண்டுக்கான சார்தாம் யாத்திரை இன்று தொடங்குகிறது.
இந்தாண்டு சார்தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் சமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சுகாதார செயலாளர் டாக்டர் ஆர்.கே.ராஜேஷ் குமார் சார் தாம் யாத்திரை செல்லும் பாதையில் சுகாதார சேவைகளை ஆய்வு செய்து யாத்திரைக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அவர் வெளியிட்டார்.
மலைப்பகுதி வானிலைக்கு தகுந்தவாறு மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிரமத்தை எதிர்கொண்டால் சிறிது நேரம் ஓய்வெடுத்து, அதன்பிறகு பயணம் செய்யுங்கள்.
55 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் நீரழிவு, ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் முன்னதாக குறிப்பிடவும். அத்தகைய பக்தர்கள் 104 மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.
இம்முறை கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
ஒவ்வொரு கி.மீட்டருக்கு மருத்துவ உதவி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சார்தாமில் சுகாதார சேவைகளை மேம்படுத்த 130 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்துள்ளது.
மேலும், மக்கள் மலையேறும் பாதையில் ஏடிஎம் வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. சார்தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.