தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று கோவை, சேலம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில், தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில், நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.