
சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த கேசவன்(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மார்க்நாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 90அறைகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் இந்த பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணி வழக்கம் போல் நடைபெற்று வந்தது.இதில் மதியத்திற்கு மேல் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து இந்த தொழிற்சாலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின.இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிற்சாலையின் மார்க்நாதபுரத்தை சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா(24) என்ற பெண் தீ விபத்தில் சிக்கி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.மேலும் இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை பணியாளர்களின் 12-இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின இந்த பட்டாசாலை தீ விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.