
தமிழ்நாடுகுடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பார் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி தற்போது கூடுதலாக திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மது ஆயத்தீர்வை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ளாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம். இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்கள் வழங்குவார்கள் என தமிழ்நாடு அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து டாஸ்மாக்கை தவிர, பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது.
இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு அனுமதிக்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மது அருந்துவது என்பது பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு நாள் நடத்தும் விழாவாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற்று சிறப்பு கட்டணம் செலுத்தி மது விருந்து அளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.