
இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம். ஸ்ரீபெரும்பூதூரில் ஆதிசேடன் அம்சமாக பகவத் ராமானுஜர் அவதரித்த நாள் இதுவாகும்.
“எப்பொழுதும் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று நினைக்க வேண்டும்” என்று பெரிய திருமலை நம்பி, எம்பாரிடம் கூறினார். “எம்பெருமானாருடைய சம்பந்தத்தினால், நான் பாக்யசாலி” என்று திருக்கோஷ்டியூர் நம்பி கூறினார்.
காஞ்சிபுரம் பேரருளாளன், ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள், திருமலை திருவேங்கடமுடையான், திருமாலிருஞ் சோலை அழகர், திருக்குறுங்குடி நம்பி மற்றும் பலர் எம்பெருமானாருடைய முக்கியத்துவத்தையும், பெருமையையும் காட்டி, நாம் அனைவரும் எம்பெருமானாரையே சார்ந்திருக்குமாறு கட்டளையிட்டார்கள். உய்ய ஒரே வழி உடையவர் திருவடி.இன்று பகவத் ராமானுஜர் அவதரித்த நாளில் பல்வேறு கோணங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.