இடப் பிரச்சினை சித்தப்பாவை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை 10 ஆயிரத்து 500 அபராதம் விதித்து திருவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இட
பிரச்சனை காரணமாக சித்தப்பாவை வெட்டி கொன்ற வாலிபருக்கு திருவலிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மேலும் 10,500 அபராதம் விதித்து உள்ளது
ராஜபாளையத்தை அருகே உள்ளது சொக்கநாதன் புதூர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் வயசு 32 இந்த செல்வத்தின் சித்தப்பா (செல்வம் அப்பா கருப்பசாமியின் உடன் பிறந்த தம்பி ) மாரியப்பன்
இந்த செல்வத்திற்கும் சித்தப்பா மாரியப்பனுக்கும் இட பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது அடிக்கடி தகராறும் ஏற்பட்டது இந்த முன் விரோதத்தை மனதில் வைத்து கடந்த 17/ 4/2018 அன்று சித்தப்பா மாரியப்பனை செல்வம் அறிவாளால் வெட்டி கொலை செய்தார் தடுக்க வந்த சித்தி ராமலட்சுமி படுகாயம் அடைந்தார் இது தொடர்பாக சித்தி ராமலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில்
சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் சித்தப்பாவை இடப்பிரச்சனை காரணமாக சித்தப்பாவை வெட்டி கொலை செய்த செல்வத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார் மேலும் 10 ஆயிரத்து 500 அபராதம் விதித்தார் இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்