திருச்சுழிஅருகே அரசு கல்லூரி கட்டிடப் பணி பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் எதிரொலி கட்டிட பொறியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஹரிஷ் குமார் (15) , என்பவர் விருதுநகரில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளதாகவும் மேலும் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மகன்
ரவிச்செல்வம் (17) இவர்நரிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
தற்போது பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வீஸ் குமாரும் ரவி செல்வமும் மேலேந்தல் அருகே புதிதாககட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி கட்டிடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்
சென்டிரிங் வேலை பார்த்து வந்தபோது அங்கிருந்த வெல்டிங் வயர் சென்றதை கவனிக்காமல் மிதித்ததால் ஹரிஷ் குமார் மற்றும் ரவிச்செல்வம் ஆகியோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இறந்தவர்களின் உடலை நரிக்குடி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இது சம்பந்தமாக நரிக்குடி போலீசார் கட்டிட இன்ஜினியர் ஜெயசீலன் ராஜா சூப்பர்வைசர்கள் பால்சாமி விஜயராகவன் ஆகியோரை இரண்டு மாணவன் இறப்பு சம்பந்தமாக கைது செய்தனர்.