
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவின் 8ம் நாளில் அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடந்தது.
இக்கோவில் சித்திரைத்திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை திக்குவிஜயம்,மே 2ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்,மே 3 தேரோட்டம், மே 4 கள்ளழகர் எதிர்சேவை,மே 5ல் வைகையாற்றில்அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தினமும் காலை, மாலை மாசிவீதிகளில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு பட்டாபிேஷகம் அம்மன் சன்னதி ஆறு கால் பலி பீடத்தில் நடந்தது.
அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டப்பட்டு, நவரத்தின கற்களாலான செங்கோல் வழங்கப்படும். அம்மனிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணனிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
அதை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வழியாக வந்து மீண்டும் அம்மனிடம் ஒப்படைத்தார்.. பின் மதுரையை ஆளும் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் அம்மன் வலம் வந்தார்.
இன்று இரவு எட்டு திக்கிலும் தேவர்களை வென்று கடைசியாக சுவாமியுடன் போர் புரியும் நிகழ்ச்சியான திக்குவிஜயம் நடக்கிறது.
மே 2 கோவிலின் வடக்காடி வீதி திருக்கல்யாணமண்டபத்தில் காலை 8:30 முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 3 தேரோட்டம் அன்று அதிகாலை 5:05 மணி முதல் 5:45 மணிக்குள் அம்மனும், சுவாமியும் எழுந்தருள தேர்கள் புறப்படுகின்றன.
அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத்திருவிழாநாளை துவங்கியுள்ளது. மே 3 இரவு 7:00 மணிக்கு கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படுகிறார். மே 4 அதிகாலை மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
மே 5 வைகை ஆற்றில் கள்ளழகர் காலை 5:45 மணிக்கு மேல் 6-:12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். மே 6- தேனுார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார அலங்காரம் நடக்கிறது.
மே 7 இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது.மே 8- காலை கள்ளழகர் அழகர் மலை நோக்கி புறப்பட்டு மே 9 காலை 10:32 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.