
சிவகாசி அருகே சட்டவிரோத மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து 665 மது பாட்டில்கள்பறிமுதல் செய்தனர்.
சிவகாசி அருகே கொத்தனேரியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே ராமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிவகாசி டி.எஸ்.பி தனஞ்செயன் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்பபடை போலீசார் அங்கு சாதாரண உடையில் சென்று மது வாங்குவது போல் நடித்து கையும் களவுமாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பிரபு, தவசி செல்வம், பன்னீர்செல்வம், முருகன் ஆகிய 4 பேரை கைது போலீசார் கைது செய்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த 665 மதுபான பாட்டில்களை எம்.புதுப்பட்டி பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் சட்டவிரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் தயக்கமின்றி 9884741609 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் எனவும் புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் சிவகாசி டிஎஸ்பி தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.