02-06-2023 9:46 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Become a member

    Get the best offers and updates relating to Liberty Case News.

    ― Advertisement ―

    spot_img

    புதுச்சேரியில் திருமண தாம்பூல பையுடன் மது பாட்டில் 

    புதுச்சேரியில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் குவார்ட்டர் பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு திருமணம் முடிந்தவுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது...
    Homeசற்றுமுன்பக்தர்கள் பிரசாதங்களை ஏற்றுக்கொள்ளும் கள்ளழகர்..

    பக்தர்கள் பிரசாதங்களை ஏற்றுக்கொள்ளும் கள்ளழகர்..

    IMG 20230505 WA0056

    மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து சுவாமி கள்ளழகர் புறப்பட்டு, மீண்டும் மலைக்கு திரும்பும் வரை ஏராளமான மண்டகப்படிகளில் படைக்கப்படும் பலவிதமான பிரசாதங்களை ஏற்றுக் கொள்கிறார்.

    பொதுவாக கோவில்களில் திருமடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மட்டும்தான் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும். ஆனால், மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து சுவாமி கள்ளழகர் புறப்பட்டு, மீண்டும் மலைக்கு திரும்பும் வரை ஏராளமான மண்டகப்படிகளில் படைக்கப்படும் பலவிதமான பிரசாதங்களை எம்பெருமான் ஏற்றுக் கொள்கிறார்.

    அத்துடன் எளியாருக்கு எளியனாக, பக்தர்களை தேடிச் சென்று நலம் விசாரிப்பது போல் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பக்தர்கள் கூட்டத்துடன் அவரும் சேர்ந்து வைகையாற்றில் இன்று (மே 5-ம் தேதி) அதிகாலை இறங்கினார். இது பகவானின் நீர்மைக் குணத்தைக் காட்டுகிறது.

    ‘எந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறாயோ அங்கிருந்து என்னை அன்போடு அழைத்தால், அந்த கூட்டத்தில் உன்னுடன் ஒருவனாக நானும் இருப்பேன் என்ற குணம் கொண்டவர் சுவாமி கள்ளழகர். அதனாலேயே பலதரப்பட்ட பக்தர்களும் அன்புடன் வழங்கும் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் அருள் செய்கிறார்” என்று சுந்தரபாஹூஸ்தம் என்ற நூலில் சுவாமி கூரத்தாழ்வான்
    நெகிழ்ந்திருக்கிறார்.