
சிவகாசியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ஆகாஷ் ( 20). சிவகாசி அரசு கலை கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வரும் நிலையில் குடும்ப வறுமை காரணமாக மாலை நேர உணவத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆகாஷ் இன்று சிவகாசி திருத்தங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சலையின் குறுக்கே நின்ற மாட்டின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரியும் மாடுகாளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.