
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து இருவரை படுகொலை செய்ய முயற்சித்த வழக்கில் மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியைச் சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பி. இவரை முன்விரோதம் காரணமாக கும்பல் ஒன்று படுகொலை செய்தது.
இந்த வழக்கில் கைதாகிய யுவராஜ், விக்கி உள்ளிட்ட 4 பேர் விருதுநகர் சிறையில் அடைக்கபட்டிருந்தனர்.
இந்தநிலையில், இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீசார் சிலம்பரசன், அழகுராஜா ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சின்னத்தம்பியின் உறவினர்கள் சிலர், சிகிச்சை பெற்று வந்த கைதிகளான யுவராஜ், விக்னேஸ்வரனை அரிவாளால் வெட்டிக் கொள்ள முயற்சித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் காப்பாற்றினர்.
இந்நிலையில், கைதிகள் இருவரை கொலை செய்ய முயற்சித்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, சின்ன தம்பியின் சகோதரர் செல்வம்(36) குமார் (40) மற்றும் சேகர் (39), மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் சரவணன்(29),தங்கமலை(27) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த சிலம்பரசன்(35), ராமச்சந்திரன்(35), ஆனந்த்(36) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.