
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5727கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் நீர்மட்டம் 103.31 அடியாகஉயர்ந்தது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,605கன அடியிலிருந்து 5727 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.06 அடியிலிருந்து 103.31அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.19 டிஎம்சியாக உள்ளது.