Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்ரசாயனம் தெளிக்கப்பட்ட 3 டன் மாம்பழங்கள்‌ அழிப்பு..

ரசாயனம் தெளிக்கப்பட்ட 3 டன் மாம்பழங்கள்‌ அழிப்பு..

IMG 20230511 WA0078

ராஜபாளையத்தில் சந்தை மார்க்கெட் பகுதியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் பகுதியில் மாம்பழங்கள் அதிகமாக விளைச்சல் இருக்கிறது. இதை சிலர் ரசாயன மருந்து தெளிக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த தகவலை யொட்டி
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் ராஜபாளையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது
ராஜபாளையம் காந்தி சிலை அருகில் உள்ள சந்தை மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் ஐயர் சிகாமணி என்பவர் மாம்பழம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
விற்பனைக்காக கொண்டு வரப்படும் மாங்காய்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து இவர் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


தகவலின் பெயரில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மீது ஸ்பிரேயர் கொண்டு ரசாயனம் தெளிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது.
இதனை அடுத்து ரசாயனம் தெளிக்கப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் நகராட்சி குப்பை வண்டியில் ஏற்றி உரக்கிடங்கில் வைத்து அழித்தனர்.

படவிளக்கம்
ராஜபாளையம் சந்தை மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
மேலும் மாம்பழங்களை நகராட்சி புறக்கடங்கில் வைத்து அழித்தனர்.

Previous article<