
விழுப்புரம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலக்குறைவால் 16 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ்(60), சங்கர்(55), தரணிவேல்(50) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
கள்ளச்சாராயம் உயிரிழப்பு காரணமான அமரன், முத்து, ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் முக்கிய கள்ளச்சாராய வியாபாரியான அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் சந்தித்து விசாரித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.