நிறுத்தி வைக்கப்பட்ட 34 மாணவர்களின்+2 தேர்வு முடிவுகள் வெளியீடு..

Published:

images 2023 05 16T152113486 - 2026
#image_title

உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களின்
+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீலகிரியைச் சேர்ந்த 34 மணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதப் பாடத் தேர்வில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவியதாக எழுந்த புகாரில் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களின் 32 பேரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், 31 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கணித தேர்வில் ஆசிரியர்கள் உதவியதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை விசாரணைக் குழுவினர் சமர்ப்பித்த நிலையில், இன்று 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத ஆசிரியா்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து 34 மாணவா்களின்  தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே சாம்ராஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாா்ச் 27ஆம் தேதி நடைபெற்ற கணித தோ்வின்போது, பணியில் இருந்த ஆசிரியா்கள் தோ்வு எழுதிய 34 மாணவா்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில், தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உதவியது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4இல் கணித தோ்வு எழுதிய  34 மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறைக்கு அனுப்பப்பட்டதால் தோ்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிடப்படவில்லை.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய முதன்மைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், துறை அலுவலா் செந்தில், அலுவலா் சீனிவாசன், அறை கண்காணிப்பாளா்கள் ராம்கி, மூா்த்தி ஆகிய 5 ஆசிரியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். 

மேலும், 34 மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறைக்கு அனுப்பி, அங்கு அதிகாரிகள் பார்வையிட்டு, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கையை விசாரணைக் குழுவினர் தாக்கல் செய்திருப்பதால், இன்று 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img