தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, தென்காசி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்ப நிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் 106 டிகிரி வரை உள்ள வெப்பம் 110 டிகிரி வரை எட்டக்கூடும் என்று தெரிகிறது. இதனால் சென்னையில் வெப்ப அலை மிக கடுமையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.