Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்மலேசியா ஒட்டகச்சிவிங்கி திடீர் மரணம்..

மலேசியா ஒட்டகச்சிவிங்கி திடீர் மரணம்..

மலேசியா ஒட்டகச்சிவிங்கி

விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் மலேசியாவில் இருந்து கொண்டு வந்த ஒட்டகச்சிவிங்கி திடீர் மரணமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சில மாதங்களாக ஒட்டகச்சிவிங்கி உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் இதே பூங்காவில் வெள்ளை புலி ஒன்று இறந்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் மே என்ற பெண் ஒட்டகச்சிவிங்கி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வந்தது.

மலேசியாவில் உள்ள நெகெரா உயிரியல் பூங்காவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கடந்த 2013-ம் ஆண்டு 4 மாத குட்டியாக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. தற்போது அதற்கு 10 வயதானது. கடந்த 3 மாதங்களாக ஒட்டகச்சிவிங்கி உடல் நலம் பாதிக்கப்பட்டது.

அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனையில் நேற்று ஒட்டகச்சிவிங்கி இறந்தது. அதனை பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்தனர். மரணத்திற்கு காரணம் நாள்பட்ட மெட்ரிடிஸ் மற்றும் நிமோனியா என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒட்டகச்சிவிங்கியின் சராசரி ஆயுட்காலம் சுமார் 20-25 ஆண்டுகளாகும். கடந்த வாரம் இதே பூங்காவில் வெள்ளை புலி ஒன்று இறந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விலங்குகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.