சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி அமாவாசை வழிபாடு கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி மே 17 முதல் பிரதோஷ தினத்தை முன்னிட்டு மலைப்பாதை திறந்து விடப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட கூடுதலான பக்தர்கள் தொடர்ந்து மலைக்கு வந்தனர். இன்று அமாவாசை தினம் என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர்.
அதிகாலை 5 மணிக்கு மலை பாதை திறந்து விடப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் பட்டனர். மலையில் உள்ள சுந்தர மகாலிங்க சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்களும் சங்கொலி பூஜைகளும் நடந்தன.
அதன் பின்னர் நாக ஆபரண அலங்காரத்தில் அருள் பாலித்த சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மாலையில் ஆபரண அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் அமாவாசை வழிபாடு துவங்கியது. பக்தர்கள் நடுநிசி வரை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பக்தர்கள், அறநிலையத்துறையினர் பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.