
கோடைகாலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி செங்கோட்டை உட்பட 50 சிறப்பு ரயில்கள் முக்கிய பகுதிகளில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குமாரி, நெல்லை, செங்கோட்டை, வேளாங்கண்ணிக்கு சென்னை எழும்பூர், தாம்பரத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம், பெங்களூரு, மங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கும் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கோடைக் காலத்தில் ரெயில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே 380 சிறப்பு ரெயில்களில் 6,369 பயணங்களை இயக்குகிறது. 2022-ல் இயக்கப்பட்ட மொத்த கோடைக் கால சிறப்பு ரெயில்களுடன் (4599 பயணங்கள் 348 ரயில்கள்) ஒப்பிடும்போது, ரெயில்வே இந்த ஆண்டு 1770 முறை கூடுதலான பயணங்களை இயக்குகிறது.
இதன்படி, முக்கிய இடங்களான பாட்னா – செகந்திராபாத், பாட்னா – யஸ்வந்த்பூர், பரௌனி – முசாபர்பூர், டெல்லி – பாட்னா, புதுடெல்லி – கத்ரா, சண்டிகர் – கோரக்பூர், ஆனந்த் விஹார் – பாட்னா, விசாகப்பட்டினம் – புரி – ஹவுரா, மும்பை – பாட்னா, மும்பை – கோரக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரெயில்வேயில் 50 சிறப்பு ரெயில்கள் மூலம் 244 பயணங்கள் இயக்கப்படவுள்ளது. இதன்படி, தாம்பரம் – நெல்லை, தாம்பரம் – செங்கோட்டை, எழும்பூர் – கன்னியாகுமரி, எழும்பூர் – நாகர்கோவில், எழும்பூர் – வேளாங்கன்னி, திருவனந்தபுரம் – மங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இயக்கப்படவுள்ளது.