Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்நாளை நடக்க இருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..

நாளை நடக்க இருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..

images 2023 05 21T133912027

தமிழகத்தில் நாளை நடக்க இருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (22-ந்தேதி) பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒன்றியத்துக்குள் மாறுதல் பெற்று செல்ல விரும்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நாளை நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது