தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் சில இடங்களில் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
இதனால் வெயில் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.