கேரளா மாநில விவசாய கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வெள்ளையணி வேளாண்மை கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக தீவைத்து எரிக்கப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த சிறுமி தீக்காயம் அடைந்தார். ஆந்திராவைச் சேர்ந்த வேறு ஒரு மாணவி அவரை தீவைத்து எரித்து உள்ளார். இருவரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை கல்லூரி நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருவல்லம் போலீசாருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்து உள்ளனர். தாக்குதலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.