அமைச்சர் அன்பில் மகேஸ்(கோப்புப்படம்)
பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் செய்தியாளகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிவைக்கப்படுமா என்கிற எதிா்பாா்ப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாா்.
இந்த நிலையில், அவர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.