கரூரில் திமுகவினர் தடுத்ததால் வருமானவரித் துறை சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனைக்கு முயன்ற போது தாக்கப்பட்டதாக கூறப்பட்ட வருமானவரித்துறை பெண் அதிகாரி மற்றும் கரூர் மாவட்டத்தில் சோதனைக்கு வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
தங்களை பணிகள் செய்ய விடாமலும் தங்களை தாக்க முற்பட்டதாகவும் திமுகவினர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தனர்.
இதையடுத்து அதிகாரிளுடன் வந்திருந்த மற்ற குழுவினர் கரூர் ராயனூர் மற்றும் மாயனூர் ஆகிய பகுதிகளில் அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை நடத்த முயன்ற போது அங்கே இருந்த திமுகவினரால் சோதனை நடத்த தடுத்ததால் எந்த ஒரு அதிகாரிகளும் சோதனை நடத்த இயலவில்லை.
இதனால் சோதனை தற்காலிகமாக காலை 11 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.