விருதுநகர் அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி – 5 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பூர்ண சந்திரசேகர் (25) இவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் பட்ட படிப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தனது கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுடன் கோயம்புத்தூர் சென்று விட்டு காரில் சிவகாசி திரும்பியபோது இவர்கள் வந்த கார் விருதுநகர் அருகே ஜி .என். பட்டி பாலம் அருகே சென்று கொண்டு இருந்த போது ஓட்டுநர் கட்டப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது
இந்த விபத்தில் கார் ஓட்டுனர் வெற்றி மற்றும் வீரபாண்டி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த பூர்ண சந்திரசேகர் (28), முத்துலட்சுமி (49) தருண் குமார் (09) மகேஸ்வரி (46) கணேஷ் பாபு (47) ஆகிய ஐந்து நபர்கள் படுகாயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆமத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் காயமடைந்தவர்கள் விருதுநகர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்
இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.