
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிச்சித்பூர் ரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர்.
நிச்சித்பூர் ரயில் வழித்தடத்தில் 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்த கம்பிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட 8 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர்.
தன்பாத் மற்றும் கோமோஹ் இடையே அமைந்துள்ள நித்சித்பூர் ரயில்வே கேட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் சில தொழிலாளர்களும் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
காயம் அடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பல ரயில்கள் பல்வேறு நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.