கர்நாடகத்தில் மைசூரு அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே திருமாகுடலு – நரசிபுரா பகுதியில் ஒரு இன்னோவோ காரும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகள் 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.