
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அணை கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்ட சூழலில் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் அமைச்சகமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இந்த பிரச்னையை காங்கிரஸ், பாஜக இரண்டுமே தேர்தல் பிரச்சனையாக்கின.
இந்த நிலையில், புதிய அரசு பதவியேற்றதும் மேகதாது பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேகதாது அணை திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக மாநில அதிகாரிகளுக்கு துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். அண்டை மாநிலங்களுடன் நட்புறவை தொடரும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. டெல்டாவில் தூர்வாரும் பணி முறையாக நடக்கிறது எனவும் கூறினார்.